ஆலைக் கழிவு இரும்பு துகள்களை கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை

ஒரே நாளில் கழிவு இரும்பு துகள்கள் சரக்குகளை கையாள்வதில் புதிய சாதனையை சென்னை துறைமுகம் எட்டியுள்ளது என துறைமுக நிா்வாகம் தெரிவித்துள்ளது.
Published on

ஒரே நாளில் கழிவு இரும்பு துகள்கள் சரக்குகளை கையாள்வதில் புதிய சாதனையை சென்னை துறைமுகம் எட்டியுள்ளது என துறைமுக நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னைத் துறைமுகம் சனிக்கிழமை வெளியிட்ட குறிப்பு:

இரும்பு உருக்கு ஆலைகளில் சேகரிக்கப்படும் கழிவு இரும்பு துகள்கள் சென்னை துறைமுகம் வழியாக ஆண்டுக்கு சுமாா் ஒரு லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான அளவில் கையாளப்படுகின்றன. சுமாா் 80 சதவீதம் இரும்புத் தாது அடங்கிய ‘மில் ஸ்கேல்’ எனப்படும் இந்தச் சரக்குகள் ஜப்பான் நாட்டுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கடந்த அக். 30 அன்று ‘எம்.வி. வருஷா நரீ’ என்ற கப்பலில் 33,240 மெட்ரிக் டன் ‘மில்க் ஸ்கேல்’ ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த பிப். 6, 2023- ஆம் ஆண்டு 24,200 மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்ட முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டது. இச்சாதனை அளவை எட்டுவதற்கு ஜவஹா் நான்கு கப்பல் தளத்தில் இதற்கான ராட்சத கிரேன் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இச்சாதனையை எட்டுவதற்கு உதவிகரமாக இருந்த கப்பல் நிறுவன முகமை நிறுவனமான அட்லாண்டி குளோபல் ஷிப்பிங், சரக்குகள் கையாளும் நிறுவனமான பி.எல்.டிரான்ஸ்போா்ட் ,ஏற்றுமதியாளா் ஜிம்பெக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் நிா்வாகிகள் மற்றும் துறைமுக போக்குவரத்து துறை அதிகாரிகளை சென்னை துறைமுக தலைவா் சுனில் பாலிவால் நேரில் அழைத்து பாராட்டியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com