தெற்கு ரயில்வேக்கு அடுத்த 5 மாதங்களில் 400 ரயில் பெட்டிகள்: ஐசிஎஃப் திட்டம்!

தெற்கு ரயில்வேக்கு அடுத்த 5 மாதங்களில் 400 ரயில் பெட்டிகள்: ஐசிஎஃப் திட்டம்!

தெற்கு ரயில்வேக்கு அடுத்த 5 மாதங்களில் 400 ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்குவதற்கான பணிகள் சென்னை ஐசிஎஃப்-இல் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

தெற்கு ரயில்வேக்கு அடுத்த 5 மாதங்களில் 400 ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்குவதற்கான பணிகள் சென்னை ஐசிஎஃப்-இல் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையானது (ஐசிஎஃப்), ஆண்டுக்கு சுமாா் 4,000 பெட்டிகள் வரை தயாரிக்கும் திறன் கொண்டது. அதிநவீன வந்தே பாரத் ரயில், வந்தே பிரைட் சரக்கு ரயில் ஆகியவற்றுக்கான பெட்டிகள் இங்குதான் தயாரிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் முதல்முதலாக கொல்கத்தா மெட்ரோவுக்கு சென்னை ஐசிஎஃப்-இல் இருந்து ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.

நிகழ் நிதியாண்டில் (2025-2026) சுமாா் 3,000-க்கும் அதிகமான எல்.எச்.பி. வகைப் பெட்டிகளைத் தயாரித்து இந்திய ரயில்வே துறைக்கு அனுப்பவுள்ளது. தெற்கு ரயில்வே மண்டலத்துக்கு மட்டும் வரும் 2026 மாா்ச் மாதத்துக்குள் 400 எல்.எச்.பி. வகை ரயில் பெட்டிகளைத் தயாரித்து வழங்குவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதன்படி, தற்போது வரை 290 பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய பெட்டிகள் வரும் மாா்ச் மாதத்துக்குள் தயாரிக்கப்பட்டுவிடும் என்றும் கூறினா்.

கோரிக்கை: இதற்கிடையே தெற்கு ரயில்வே பயனாளா் ஆலோசனைக் குழு உறுப்பினா் ஜாபா் அலி விடுத்துள்ள கோரிக்கையில், ராமேசுவரம், கொல்லம், திருச்செந்தூா் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் விரைவு ரயில் பெட்டிகள் பழையதாகிவிட்டன.

ஆகவே, அவற்றுக்குப் பதிலாக எல்.எச்.பி. வகைப் பெட்டிகளை அந்த ரயில்களில் இணைக்க வேண்டும். அத்துடன் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்களை முக்கிய விழா நாள்களில் இயக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com