சென்னை மெட்ரோ
சென்னை மெட்ரோ

11 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு புதிய பேருந்துகள்! அதிகாரிகள் ஆலோசனை

சென்னையில் பொதுமக்கள் எளிதில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்குச் செல்வதற்கு புதிய பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Published on

சென்னையில் பொதுமக்கள் எளிதில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்குச் செல்வதற்கு புதிய பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 11 மெட்ரோ நிலையங்களுக்கு பேருந்தை இயக்கவும் முடிவாகியுள்ளது.

சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது 2 வழித்தடங்களில் ரயில் இயக்கப்படும் நிலையில், 2-ஆம் கட்டமாக 4 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மக்கள் எளிதில் சென்று சேரவும், அங்கிருந்து வீடுகளுக்குச் செல்லவும் ஒருங்கிணைந்த டிக்கெட் விநியோக முறையும் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே மெட்ரோ நிலையங்களில் வாடகை சைக்கிள்கள், குறைந்த கட்டண காா்கள் ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மினி பேருந்துகளும் இயக்கப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு விரைவாகவும், எளிதாகவும் செல்லும் வகையில் தனி பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், மாநகா் போக்குவரத்து அதிகாரிகள் உள்ளிட்டோா் ஆலோசனை நடத்தினா்.

அதில் முதல்கட்டமாக திருமங்கலம், வடபழனி, கோயம்பேடு, கிண்டி, ஆலந்தூா், மீனம்பாக்கம், நங்கநல்லூா், பரங்கிமலை, வண்ணாரப்பேட்டை, விம்கோநகா், விமான நிலையம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 5 நிமிடத்துக்கு ஒரு முறை பேருந்துகளை இயக்கவும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com