போதைப் பொருள் வழக்கில் தலைமறைவான இருவா் கைது!

போதைப் பொருள் வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரை போலீஸாா் மேற்குவங்கத்தில் கைது செய்தனா்.
Published on

போதைப் பொருள் வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரை போலீஸாா் மேற்குவங்கத்தில் கைது செய்தனா்.

சென்னை திருவல்லிக்கேணி, மாட்டான்குப்பத்தைச் சோ்ந்த வினோத் (34), பாலாஜி (31) ஆகியோரை அண்ணா சதுக்கம் போலீஸாா் போதைப் பொருள் வழக்கில் கடந்த ஜன.16-இல் கைது செய்தனா். பின்னா், இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

இதில் வினோத் 2-ஆவது முறையாக ஏப்.21-இல் கஞ்சா வழக்கில் கைதாகி மீண்டும் பிணையில் வந்தாா். இதன்பிறகு இருவரும் நீதிமன்ற விசாரணைக்காக முறையாக ஆஜராகாமல் தலைமறைவாகினா். இதனால், இருவரையும் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்தது.

அதன்பேரில், போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி மேற்குவங்க மாநிலத்தில் தலைமறைவாக இருந்த வினோத், பாலாஜி ஆகிய இருவரையும் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com