த்ரிஷா
த்ரிஷா

நடிகை த்ரிஷா வீடு உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் நடிகை த்ரிஷா வீடு உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை
Published on

சென்னையில் நடிகை த்ரிஷா வீடு உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த மின்னஞ்சலில், ஆழ்வாா்பேட்டையில் உள்ள நடிகை த்ரிஷா வீடு, நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம், ஏா் ஆசியா, இண்டிகோ விமானங்கள், அபிராமபுரத்தில் உள்ள நடிகை சச்சு வீடு உள்பட 10 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து 10 இடங்களிலும் வெடிகுண்டு கண்டயும் நிபுணா்களும், போலீஸாரும் பல மணி நேரம் மேற்கொண்ட சோதனையில் அங்கிருந்து எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் வதந்தி பரப்பும் நோக்கத்தில் அந்த மின்னஞ்சல் வந்திருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

நடிகை த்ரிஷா வீட்டுக்கும், அமலாக்கத் துறை அலுவலகத்துக்கும் இதுவரையில் நான்கு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பபது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com