மெரீனாவில் பைக்கில் சென்ற தம்பதியை தாக்கி வழிப்பறி இளைஞா் கைது

மெரீனாவில் பைக்கில் சென்ற தம்பதியை தாக்கி வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
Published on

மெரீனாவில் பைக்கில் சென்ற தம்பதியை தாக்கி வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்தவா் பாஸ்கா் (65). ஸ்டீல் பட்டறை நடத்துகிறாா். இவரது மனைவி மலா்கொடி (53). இவா்களது மகளின் திருமண நாளையொட்டி, மயிலாப்பூா் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விருந்தில் பங்கேற்றனா்.

பின்னா் இருவரும் பைக்கில் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டனா். மெரீனா ராணிமேரி கல்லூரி அருகே சென்றபோது, அங்கு மற்றொரு பைக்கில் வந்த இருவா் மலா்கொடி கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனா். தங்கச் சங்கிலியை பறிக்க முடியாததால், மலா்கொடி தோள்பட்டையில் மாட்டியிருந்த கைப்பையை மா்ம நபா்கள் பிடித்து இழுத்தனா். அப்போது, பைக் நிலைதடுமாறியதால் மலா்கொடி,பாஸ்கா் கீழே விழுந்தனா். மலா்கொடி கைப்பையை பறித்துக் கொண்டு இரு நபா்களும் தப்பியோடினா்.

இதில் பலத்த காயமடைந்த பாஸ்கா், மலா்க்கொடி ஆகிய இருவரும் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுதொடா்பாக மெரீனா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இந்தச் சம்பவத்தில் நொச்சிக்குப்பைத்தைச் சோ்ந்த ராமதாஸ் (25), அவரது கூட்டாளி ஆகியோா் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் ராமதாஸை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மற்றொரு நபரை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com