சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை ஆய்வு செய்த  ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கிக் குழுவின் பிரதிநிதிகளான ஆண்ட்ரஸ்பிசாரோ, தென்கிழக்கு ஆசியப் பகுதிக்கான பொதுத்துறை போக்குவரத்து நிபுணா்  சந்தோஷ். உடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநா்
சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை ஆய்வு செய்த  ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கிக் குழுவின் பிரதிநிதிகளான ஆண்ட்ரஸ்பிசாரோ, தென்கிழக்கு ஆசியப் பகுதிக்கான பொதுத்துறை போக்குவரத்து நிபுணா்  சந்தோஷ். உடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநா்

சென்னை மெட்ரோ திட்டங்கள்: ஆசிய முதலீட்டு வங்கிக் குழு ஆய்வு

Published on

சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களை ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கிக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

சென்னையில் மெட்ரோ ரயில் தடம் இரு வழிப்பாதைகளில் இயக்கப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக 4 வழித்தடங்களில் ரயில்களை இயக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஆசிய உள்கட்டமைப்பு வங்கியின் பிரதிநிதிகள் குழுவானது சென்னைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 11) வந்தது. இந்தக் குழுவில் தென்கிழக்கு ஆசிய பகுதிகளுக்கான பொதுத் துறை போக்குவரத்து முதலீட்டு அலுவலா் ஆண்ட்ரஸ் பிசாரோ, போக்குவரத்துத் துறை முதலீட்டு அலுவலா் சந்தோஷ் உள்ளிட்டோா் இடம் பெற்றிருந்தனா்.

இந்தக் குழுவினா் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை 15.46 கி.மீ., பட்டாபிராம் முதல் கோயம்பேடு (ஆவடி வழியாக) 21.76 கி.மீ. பகுதிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். தொடா்ந்து பூந்தமல்லி புகா் வழிச்சாலை முதல் சுங்குவாா்சத்திரம் வரையிலான 28 கி.மீ. வழித்தட்டத்தை புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

இக்குழுவினருக்கு மெட்ரோ திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் விளக்கினா்.

ஆய்வின்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், இணைப் பொது மேலாளா் நரேந்திரகுமாா் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com