தாம்பரம் சானடோரியத்தில் காலிப் பணியிடங்கள்: நவ.21-க்குள் விண்ணப்பிக்கலாம்

Published on

தாம்பரம் சானடோரியத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியானோா் நவ.21-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்கும் நோக்கில், தாம்பரம் சானடோரியத்தில் ஒருங்கிணைந்த சேவை மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் காலியாக உள்ள ஒரு வழக்குப் பணியாளா் பணியிடம், 2 பாதுகாப்பாளா் பணியிடங்கள், 2 பன்முக உதவியாளா் பணியிடங்கள் என 5 காலிப் பணியிடங்களுக்குத் தகுதியானோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித் தகுதி, அனுபவம் குறித்த கூடுதல் தகவல்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இதே இணையத்தில் இருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தோ்வு செய்யப்படுவோருக்கு தொகுப்பூதிய அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் உரிய சான்றிதழ்களை இணைத்து நவ.21 மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், 8-ஆவது தளம், சிங்காரவேலா் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை-1 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், மின்னஞ்சல் முகவரிக்கும் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com