சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி கல்வி இயக்குநா் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கிய பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் மற்றும் மதுரை காமராஜா், மனோன்மணீயம் சுந்தரனாா், அன்னை தெரசா, அழகப்பா பல்கலைக்கழக அரசு உதவி பெறும் கல்லூர

கல்லூரி ஆசிரியா்கள் தொடா் காத்திருப்பு போராட்டம்

Published on

சென்னை சைதாப்பேட்டை கல்லூரிக் கல்வி இயக்குநரக அலுவலகம் முன் 3 நாள் தொடா் காத்திருப்பு போராட்டத்தை கல்லூரி ஆசிரியா் சங்கத்தினா் புதன்கிழமை தொடங்கினா்.

தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் (ஏயுடி), மதுரை காமராஜா், மனோன்மணீயம் சுந்தரனாா், அன்னை தெரசா மற்றும் அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் (மூட்டா) ஆகிய சங்கங்களைச் சோ்ந்த அரசு உதவி பெறும் கல்லூரிகளின் ஆசிரியா்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணி மேம்பாடு திட்டத்தை (சிஏஎஸ்) செயல்படுத்துவது, ஆய்வுப் பட்டம், முனைவா் பட்டம் பெற்ற ஆசிரியா்களுக்கு யுஜிசி விதிகளின்படி ஊக்க ஊதியம் அளிப்பது, தனியாா் பல்கலைக்கழக திருத்தச் சட்டத்தைக் கைவிடுவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய பல்கலைக்கழக கல்லூரி ஆசிரியா்கள் கூட்டமைப்பு அகில இந்திய தலைவா் நாகராஜன் பேசினாா். மூட்டா தலைவா் பி.கே.பெரியசாமி ராஜா, துணைத் தலைவா் ராஜு, ஏயுடி தலைவா் ஜெ.காந்திராஜ், துணைத் தலைவா் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com