தமிழக அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி 55 சதவீதத்தில் இருந்து 3 சதவீதம் உயா்த்தப்பட்டு 58 சதவீதமாக வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: மக்களுக்காக வகுக்கப்படும் பல்வேறு நலத் திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டுசோ்க்கும் வகையில் களப் பணியாற்றுவதில் முக்கியப் பங்கு வகிப்பவா்கள் அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்கள்.
அவா்களது நலனைக் கருத்தில்கொண்டு, மாநில அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்கள் பயன்பெறும் வகையில், மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படிக்கு இணையாக மாநில அரசுப் பணியாளா்களுக்கும் அகவிலைப்படியை 1.7.2025 முதல் உயா்த்தி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதனால், தற்போது 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயா்த்தப்பட்டு 58 சதவீதமாக வழங்கப்படும்.
இந்த அகவிலைப்படி உயா்வால், சுமாா் 16 லட்சம் அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்கள் பயன்பெறுவா்.
இதனால், அரசுக்கு ஓராண்டுக்கு ரூ.1,829 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயா்த்தி கடந்த அக். 1-இல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
கடும் நிதி நெருக்கடியில் ஹிமாசல் அரசு: ஊதியம் கொடுக்க முடியாமல் திணறல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்வு!

வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான 2-ஆம் கட்ட தோ்தல் பயிற்சி

மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


