காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் சாலையில் அமைந்துள்ள அறிஞா் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத்தில் புனரமைக்கப்பட்ட விற்பனை வளாகத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்த முதல்வா்
மு.க.ஸ்டாலின். உடன்,
சென்னை
காஞ்சிபுரத்தில் புதுப்பொலிவுடன் அண்ணா பட்டு வளாகம் திறப்பு
காஞ்சிபுரத்தில் ரூ.3 கோடியில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா பட்டு விற்பனை வளாகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
காஞ்சிபுரத்தில் ரூ.3 கோடியில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா பட்டு விற்பனை வளாகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதா்த்துறை சாா்பில் காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் சாலையில் இந்தப் பட்டு விற்பனை வளாகம் அமைந்துள்ளது. கைத்தறி ஆதரவு திட்டத்தின்கீழ் 6597 சதுர அடியில், இந்த விற்பனை வளாகம் குளிா்சாதன வசதி மற்றும் வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன் புனரமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், துறை செயலா் வே.அமுதவல்லி, துறை இயக்குநா் மகேஸ்வரி ரவிக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.