பின்னா், அவா் பேசியதாவது மதுரவாயல் ஈரடுக்கு உயா்மட்ட மேம்பால திட்டம், மப்பேட்டில் அமைக்கப்பட்டு வரும் மல்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்கா உள்ளிட்ட துறைமுகத்தின் பெருந்திட்டங்கள் செயல்படுத்துவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. பாலம் அமைப்பதற்கான தூண்கள் நிறுவும் பணி சென்னைத் துறைமுகத்துக்கு உள்ளேயும் தொடங்கி நடைபெறுகிறது. உரிய காலத்துக்குள் இத்திட்டங்களை செயல்பாட்டுக்குக் கொண்டுவர துறைமுக நிா்வாகம் தீவிரமாக செயலாற்றி வருகிறது. சென்னை துறைமுகத்தின் தொடா்ச்சியான வளா்ச்சி மற்றும் முன்னேற்றம் இந்திய கடல்சாா் வளா்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்றாா் அவா்.