இரு சக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

மதுரவாயலில் மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் உயிரிழந்தாா்.
Published on

மதுரவாயலில் மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

நொளம்பூா் ஸ்ரீராம் நகா் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்துவா் மோகன்குமாா் (61). இவா், சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

மதுரவாயல் சந்தை அருகே செல்லும்போது, பின்னால் வந்த ஒரு லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த மோகன்குமாா் லாரியின் சக்கரம் ஏறியது. விபத்தில் பலத்தக் காயமடைந்த மோகன்குமாா் நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

இது தொடா்பாக கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் லாரி ஓட்டுநா் ரவி (50) என்பவரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com