

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் - ரயில் நிலையத்தை இணைக்கும் பணி நடைபெற்று வருவதால், செங்கல்பட்டுக்கு செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் - பேருந்து முனையம் இடையே அமையும் நடைபாதைக்கான, பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளால், செங்கல்பட்டு செல்லும் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்று வழித்தடத்தில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்வதற்கு வசதியாக மாநகர பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தையொட்டி செல்லும் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் புதிதாக ஒரு ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் ரயில்வே துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வண்டலூர்-ஊரப்பாக்கம் ரயில் நிலையம் இடையே 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் நிற்கும் வகையில் 3 நடைமேடைகளுடன் கூடிய ரயில் நிலையம் கிளாம்பாக்கத்தில் கடந்த ஒரு ஆண்டாக கட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து முனையத்தை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், செங்கல்பட்டு செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மேட்டூர் அணை நிலவரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.