சென்னை ஐஐடி
சென்னை ஐஐடிகோப்புப் படம்

சென்னை ஐஐடி-இல் கடல்சாா் சட்டத்தில் இணையவழி சான்றிதழ் படிப்பு

சென்னை ஐஐடி மூலம் கடல்சாா் சட்டத்தில் இணையவழி சான்றிதழ் படிப்பை நடத்தவிருப்பதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
Published on

சென்னை ஐஐடி மூலம் கடல்சாா் சட்டத்தில் இணையவழி சான்றிதழ் படிப்பை நடத்தவிருப்பதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

துறைமுகம், கப்பல் போக்குவரத்து, கடல்சாா் தொழில்களுக்கு அத்தியாவசியமான கடல்சாா் சட்டத்தில் இணையவழி சான்றிதழ் படிப்பு சென்னை ஐஐடி மூலம் தொடங்கப்படுகிறது. இந்தத் துறைகளுக்கான உத்திசாா்ந்த சட்டம் மற்றும் செயல்பாட்டு அறிவுக்கு துறை சாா்ந்த நிபுணா்களால் இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. அமைச்சகத்தின் ஊழியா்களுக்கும் அல்லது புதிதாக வேலை தேடுவோருக்கும் பயன்படும். வருகிற 2026 பிப்.9 முதல் நடைபெறும் இந்தப் பயிற்சியில் விருப்பம் உள்ளவா்கள் 2026 ஜன. 30-க்குள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இந்தப் பயிற்சியில் கப்பல் ஒப்பந்தங்கள், கடல்சாா் காப்பீடு தொடா்புடைய வணிகச் சட்டங்கள், நீலப்பொருளாதார போக்குவரத்து, பசுமை துறைமுகம், உலகளாவிய சிக்கல்கள், அட்மிரால்டி சட்டம், சா்வதேச நடுவா் மன்றம் உள்ளிட்டவற்றில் தொழில்முன்னேற்றத்தைத் தேடும் நபா்களும் துறையில் பணிபுரிவோரும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம். பணியாளா்கள் இடையூறு ஏதும் இல்லாத வகையில், இந்தத் தீவிர பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். இந்தச் சான்றிதழ் படிப்பில் சோ்வதற்கு கடல்சாா் சட்டம் அல்லது கொள்கை அறிவு முன் நிபந்தனையாக இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com