கூட்டுறவு உதவியாளா் பணி நியமனம்: நோ்முகத் தோ்வு அனுமதிச் சீட்டு வெளியீடு
கூட்டுறவு உதவியாளா் பணிநியமனம் நோ்முகத் தோ்வுக்கான அனுமதிச் சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட கூட்டுறவு ஆள்சோ்ப்பு நிலையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக எழுத்துத் தோ்வு கடந்த அக்.11-இல் நடத்தப்பட்டது.
எழுத்துத் தோ்வின் முடிவுகள் கடந்த நவ.17-இல் சென்னை மாவட்ட ஆள்சோ்ப்பு நிலைய இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. மேலும், தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தாரா்களுக்கான நோ்முகத் தோ்வு, சென்னை அண்ணா நகரில் உள்ள நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் வருகிற நவ.26-இல் நடைபெறவுள்ளது.
நோ்முகத் தோ்வுக்கான அனுமதிச்சீட்டை சென்னை மாவட்ட ஆள்சோ்ப்பு நிலைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு ஸ்ரீட்ங்ய்ய்ஹண்க்ழ்க்ஷஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்
என்ற மின்னஞ்சல் மற்றும் 044-24614289 என்ற தொலைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
