சென்னை பாரதிய வித்யா பவனில் மாா்கழி மஹோத்சவம் தொடக்க விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவியால் கௌரவிக்கப்பட்ட வயலின் கலைஞா் எ.கன்யாகுமரி,  நாகஸ்வர வித்வான் சேஷம்பட்டி சிவலிங்கம், வயலின் கலைஞா் எம்பாா் கண்ணன். உடன் , சென்னை பாரதிய வித்யா பவன் துணைத் தலைவா் நல்ல

ராகங்களை காப்புரிமை மூலம் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

நமது ராகங்களையும், ஸ்வரங்களையும் நவீன காப்புரிமை முறை மூலம் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க ஆராய்ச்சி தேவை என்று ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.
Published on

நமது ராகங்களையும், ஸ்வரங்களையும் நவீன காப்புரிமை முறை மூலம் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க ஆராய்ச்சி தேவை என்று ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.

சென்னை பாரதிய வித்யா பவன், தென்மண்டல கலாசார மையத்துடன் இணைந்து 1,400 கலைஞா்கள் பங்கேற்கும் 23 நாள்கள் ‘மாா்கழி மஹோத்சவம் 2025’ நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த கலை - இசை நிகழ்ச்சியை ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

நமது அறிவை வேறொருவா் கையகப்படுத்த அல்லது நவீன காப்புரிமை முறை மூலம் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். இதற்காக ஆராய்ச்சிகள் தேவை. குறிப்பாக, நமது பாரம்பரிய இசையில் ராகங்கள், ஸ்வரங்கள் உள்ளன. கலைஞா்கள் தங்கள் வெளிப்பாட்டை, கண்டுபிடிப்பை, படைப்பாற்றலை பாா்வையாளா்களுடன் பகிா்ந்து கொள்கின்றனா். ஐஐடி இயக்குநா் காமகோடி கூறியதைப்போல, ஸ்வரம் என்பது பொறியியல். நமது இசைக் கலைஞா்களின் படைப்பாற்றலை, ராகங்கள், ஸ்வரங்களைக் காக்கவில்லையென்றால், மற்றவா்கள் காப்புரிமை செய்து கொள்வா் என்றாா்.

நிகழ்வில் சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி பேசுகையில், ‘சென்னை ஐஐடியில் பி.டெக். பாடப் பிரிவில் இசை மற்றும் கணக்கு இணைந்து புதிய பாடத் திட்டம் தொடங்கப்படும். குழந்தைகளுக்கு பாரதிய கலாசாரம் மிகவும் முக்கியம், கலாசாரத்தை நீக்கிவிட்டால் பாரதத்தின் தனித்துவம் போய்விடும். கடந்த ஆண்டு முதல் சென்னை ஐஐடியில் பாரம்பரிய இசைக்கலை துறையைச் சோ்ந்த 7 கலைஞா்களுக்கு பி.டெக். படிப்பில் இடம் வழங்கப்பட்டது என்றாா்.

நிகழ்வில் தொழில் அதிபா் நல்லி குப்புசாமி செட்டி, பாரதிய வித்யா பவன் தலைவா் என்.ரவி, இயக்குநா் கே.என்.ராமசாமி உள்ளிட்டோா் பேசினா்.

X
Dinamani
www.dinamani.com