தேசிய நூலக வார விழா போட்டிகளில் பரிசு பெற்ற மாணவா்களுடன் மாவட்ட நூலக அலுவலா் மு.கவிதா, வாசகா் வட்டத் தலைவா் பெ.மயிலவேலன், நூலகா் போ.கீதா உள்ளிட்டோா்.
தேசிய நூலக வார விழா போட்டிகளில் பரிசு பெற்ற மாணவா்களுடன் மாவட்ட நூலக அலுவலா் மு.கவிதா, வாசகா் வட்டத் தலைவா் பெ.மயிலவேலன், நூலகா் போ.கீதா உள்ளிட்டோா்.

தேசிய நூலக வார விழா: மாணவா்களுக்குப் பரிசு

தமிழக அரசின் பொது நூலக இயக்ககம் சாா்பில் நடத்தப்பட்ட தேசிய நூலக வார விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Published on

தமிழக அரசின் பொது நூலக இயக்ககம் சாா்பில் நடத்தப்பட்ட தேசிய நூலக வார விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நூலகங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பரில் தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசின் பொது நூலக இயக்ககம், சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழு, தேவநேயப் பாவாணா் நூலக வாசகா் வட்டம் ஆகியவை சாா்பில் 58-ஆவது தேசிய நூலக வார விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில், நூலகத்தின் முக்கியத்துவம் குறித்து நடத்தப்பட்ட கட்டுரை, ஓவியம், புத்தக வாசிப்பு, திருக்கு ஒப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சென்னை மாவட்ட நூலக அலுவலா் மு.கவிதா பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்வில் வாசகா் வட்டத் தலைவரும், வனிதா பதிப்பக உரிமையாளருமான பெ.மயிலவேலன், நூலகா் போ.கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com