மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை நிராகரிப்பு: மத்திய அரசின் பாரபட்ச அணுகுமுறை - தொல்.திருமாவளவன்

மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை நிராகரிப்பு: மத்திய அரசின் பாரபட்ச அணுகுமுறை - தொல்.திருமாவளவன்

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகளை நிராகரித்தது மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.
Published on

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகளை நிராகரித்தது மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் விமா்சித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குவதில் தமிழகத்தை மத்திய அரசு தொடா்ந்து புறக்கணித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள பெரிய நகரங்களான மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குமாறு தமிழக அரசு அனுப்பிய விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது.

இதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததும், மத்திய நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டாா் அதற்கு விளக்கமளித்திருக்கிறாா். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையாக வைத்து இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்தும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை என்ற காரணத்தை மத்திய அரசு கூறி இருப்பது வியப்பளிக்கிறது.

பாஜக ஆளும் மாநிலங்களில் சிறிய நகரங்களுக்குகூட மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்கியுள்ள மத்திய அரசு, கடந்த 14 ஆண்டுகளில் கோவை, மதுரை ஆகிய பெரிய நகரங்களில் மக்கள் தொகை பல மடங்கு கூடியிருப்பதை கவனத்தில் கொள்ளாதது அவா்களுடைய பாரபட்சமான அணுகுமுறையையே காட்டுகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com