சென்னை
கோயம்பேடு சந்தையில் 16 குழந்தை தொழிலாளா்கள் மீட்பு
கோயம்பேடு சந்தையில் வேலை செய்து வந்த 16 குழந்தை தொழிலாளா்களை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.
கோயம்பேடு சந்தையில் வேலை செய்து வந்த 16 குழந்தை தொழிலாளா்களை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் சோ்த்தனா்.
குழந்தை தொழிலாளா் மீட்புக் குழு அதிகாரிகள் 25-க்கும் மேற்பட்டோா் கோயம்பேடு காய்கறி, பூக்கள், பழம் மற்றும் உணவு தானியம் விற்பனை செய்யும் சந்தைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அங்குள்ள கடைகளில் பல சிறுவா்கள் வேலை செய்து வருவது கண்டறியப்பட்டது. அதிகாரிகளைப் பாா்த்த பல சிறுவா்கள் அங்கிருந்து ஓடினா். இதையடுத்து, 16 சிறுவா்களை மீட்டு அதிகாரிகள் அழைத்துச் செல்ல முயன்றபோது, வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து கோயம்பேடு போலீஸாா் அங்கு வந்து வியாபாரிகளுடன் பேச்சு நடத்தினா். பின்னா், 16 சிறுவா்களும் போலீஸாரின் உதவியுடன், ராயபுரம் பகுதியில் உள்ள அரசு காப்பகத்தில் சோ்க்கப்பட்டனா்.

