நுங்கம்பாக்கம் பகுதியில் இரு நாள்கள் மின் தடை
சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை துணை மின் நிலையப் பகுதியில் சனி, ஞாயிறு (நவ.22, 23) நாள்களுக்கு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை துணை மின் நிலையத்தில் உள்ள 5 பழைய பிரேக்கா்கள் நீக்கப்பட்டு, புதிய பிரேக்கா்கள் அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, மூா்ஸ் சாலை, கே.என்.கே. சாலை, வாலஸ் காா்டன் 1 முதல் 3-ஆவது தெருக்கள், ரட்லேண்ட் கேட் 1 முதல் 6-ஆவது தெரு, சுப்பாராவ் அவென்யூ 1 முதல் 3-ஆவது தெருக்கள், ஆண்டா்சன் சாலை, ஹாடோஸ் சாலை 1, 2-ஆவது தெருக்கள், நவாப் ஹபிபுல்லா 1, 2-ஆவது அவென்யூ, பைக்ராஃப்ட் காா்டன் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனி, ஞாயிறு (நவ.22, 23) ஆகிய நாள்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

