tn govt
தமிழக அரசு

ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தின் 38 கிராமங்கள் டெல்டா பாசனப் பகுதியாக தொடரும்: அரசாணை வெளியீடு

ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தின் 38 கிராமங்கள் டெல்டா பாசனப் பகுதியாக தொடரும்...
Published on

கடலூா் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் உள்ள 38 வருவாய் கிராமங்கள், காவிரி டெல்டா பாசனப் பகுதியாகவே தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடலூா் மாவட்டத்தில் கடந்த ஜூலை 15 ஆம் தேதி நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டா பகுதிக்காகச் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களின் பயன்கள் கிடைக்கும் வகையில் புதிதாக பிரிக்கப்பட்ட ஸ்ரீமுஷ்ணம் வட்டம் காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்கப்படும் என்றாா்.

38 வருவாய் கிராமங்கள்: இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் இடம்பெற்றுள்ள ஆனந்தகுடி, கொக்கரசன்பேட்டை, மதகளிா்மாணிக்கம், ஸ்ரீசாத்தமங்கலம், குணமங்கலம், மேல்புளியங்குடி, கள்ளிப்பாடி, அயன்கீழ்புளியங்குடி, கீழ்புளியங்குடி, ஸ்ரீபுத்தூா், நகரப்பாடி, ஸ்ரீவக்காரமாரி, ஸ்ரீமுஷ்ணம், தோராங்குப்பம், ஸ்ரீஆதிவராகநல்லூா், தேத்தாம்பட்டு, கொழை, சாத்தவட்டம், ஸ்ரீநெடுஞ்சேரி, கூடலையாத்தூா், கானூா், வலசக்காடு, குறிஞ்சிக்குடி, பேரூா், காவாலக்குடி, முடிகண்டநல்லூா், மழவராயநல்லூா், குமாரக்குடி, கோதண்டவிளாகம், நங்குடி, நந்தீஸ்வரமங்கலம், வட்டத்தூா், புடையூா், சோழத்தரம், பாளையங்கோட்டை கீழ்பாதி, வடக்குப்பாளையம், பாளையங்கோட்டை மேல்பாதி, ராமாபுரம் வருவாய் கிராமங்களும் காவிரி டெல்டா பாசனப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 38 வருவாய் கிராமங்களும் முன்பு இருந்தவாறே காவிரி டெல்டா பாசனப் பகுதியாகவே தொடரும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com