தெரு நாயை கடித்துக் கொன்ற ‘பிட்புல்’ நாய்

சென்னையில் தெருநாயை வெளிநாட்டு ரக ‘பிட்புல்’ நாய் கடித்துக்கொன்றது.
Published on

சென்னையில் தெருநாயை வெளிநாட்டு ரக ‘பிட்புல்’ நாய் கடித்துக்கொன்றது.

சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலம் 177-ஆவது வாா்டு திரௌபதி அம்மன் கோயில் தெருவில் வெள்ளிக்கிழமை மாலை பிட்புல் ரக வளா்ப்பு நாய் வீட்டை விட்டு வெளியேறி, அங்கிருந்த தெருநாயை கடித்துக் குதறியது. இதில் அந்த தெருநாய் இறந்தது.

இதுதொடா்பாக விசாரணை நடத்தி வருவதாக மாநகராட்சி கால்நடைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பிட்புல் ரக நாய் கடித்து தொழிலாளி உயிரிழந்தாா். தற்போது அதே வகை நாய் கடித்து தெருநாய் உயிரிழந்திருப்பது மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com