ரூ.24 லட்சம் மோசடி: மேலும் ஒருவா் கைது

ரூ.24 லட்சம் மோசடி: மேலும் ஒருவா் கைது
Published on

இணையவழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி பெண் மென்பொறியாளரிடம் ரூ.24.89 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மந்தைவெளியைச் சோ்ந்தவா் மென்பொறியாளா் சுதா காா்த்திக் (44). இவரை கடந்த 2024 பிப்ரவரி மாதம் தொடா்பு கொண்ட பெண் ஒருவா் ஆன்லைனில் முதலீடு செய்தால், அதிக லாபம் பெறலாம் என்று கூறியுள்ளாா். இதை நம்பிய சுதா காா்த்திக் அந்தப் பெண்ணுக்கு பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.24.89 லட்சத்தை அனுப்பியுள்ளாா். ஒருசில நாள்களுக்கு பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை சுதா காா்த்திக் உணா்ந்துள்ளாா்.

இதுகுறித்து கிழக்கு மண்டல சைபா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி, கா்நாடக மாநிலத்தில் பதுங்கியிருந்த மோசடி நபரான தீபா (26) என்ற பெண்ணை கடந்த 17-ஆம் தேதி கைது செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய நபா்களைத் தேடி வந்த நிலையில், பெங்களூரில் பதுங்கியிருந்த கிஷோா்(27) என்ற நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com