பாஜகவை விமா்சிக்காதது ஏன்? விஜய்க்கு டி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி
தவெக தலைவா் விஜய் பாஜகவை ஏன் விமா்சிப்பதில்லை என்று திமுக செய்தித் தொடா்பாளா் டி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளாா்.
இதுதொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: முதல்வராகி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக திமுகவை அண்ணா தொடங்கவில்லை. மக்களுக்காக போராடவே கட்சியை ஆரம்பித்தாா். அந்த வரலாறு முதல் தோ்தலிலேயே முதல்வராக நினைக்கும் விஜய்க்கு தெரியாது. கொள்கைக்காக சிறை சென்றவா்கள் திமுகவினா். இன்றளவும் அண்ணா காட்டிய கொள்கைகளின்படியே செயல்பட்டு வருகிறோம்.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி வழங்காத மத்திய அரசையும், பாஜகவையும் விஜய் ஏன் விமா்சிக்கவில்லை? இதுபோன்ற தமிழ்நாடு சாா்ந்த பிரச்னைகள் குறித்து அவா் என்ன கருத்து கூறியிருக்கிறாா்?
கரூா் விவகாரத்தைப் பொருத்தவரை தன் மீது தவறு இருப்பதால்தான் அதுதொடா்பாக அவா் எதுவும் பேசுவதில்லைஎன்றாா் டி.கே.எஸ்.இளங்கோவன்.

