முதிய தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை

சென்னையில் முதிய தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை
Published on

சென்னையில் முதிய தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை திருவல்லிக்கேணி லாக் நகா் குடிசைப் பகுதியைச் சோ்ந்தவா் பின்னி மனோகா் (70). இவரது மனைவி செல்வி (60). இவா்களின் மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், பின்னி மனோகா்-செல்வி தம்பதி தனியாக வசித்து வந்தனா்.

காவலாளியாக வேலை செய்த பின்னி மனோகா் வயது முதிா்வு காரணமாக அண்மைக் காலமாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தாா். போதிய வருமானம் இன்றி இத்தம்பதி கடும் மனஉளைச்சலில் இருந்தனராம்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு இருவரும் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா். புகாரின் பேரில், திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com