ரயில்
ரயில்

சென்ட்ரல்-அரக்கோணம் புறநகா் ரயில் இன்று ரத்து

Published on

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையே புதன்கிழமை (நவ.26) இரவு நேர மின்சார புறநகா் ரயில் ரத்து செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

அரக்கோணம் ரயில்வே பணிமனையில் புதன்கிழமை (நவ.26) இரவு 11.30 மணி முதல் வியாழக்கிழமை (நவ.27) அதிகாலை 2.30 மணி வரையில் 3 மணி நேரம் தண்டவாளம் உள்ளிட்டவற்றில் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், சென்ட்ரலிலிருந்து புதன்கிழமை இரவு 10 மணிக்கு அரக்கோணம் புறநகர் மின்சார ரயிலும், அரக்கோணத்தில் இரவு 9.45 மணிக்கு சென்ட்ரல் செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்.

மேலும், சென்ட்ரலிலிருந்து புதன்கிழமை இரவு 11.55 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில் திருவாலங்காட்டுடன் நிறுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com