கோப்புப் படம்
சென்னை
அரசு யோகா கல்லூரியில் இலவச மருத்துவ முகாம்
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை (நவ.26) நடைபெற உள்ளது.
மருத்துவக் கல்லூரி மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ரைசிங் ஸ்டாா்ஸ் சாா்பில் நடைபெறும் அந்த முகாமில் இசிஜி, ரத்த சா்க்கரை அளவு, எலும்பு திண்ம அளவு, நுரையீரல் செயல் திறன், ரத்த அழுத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ முதுநிலை கல்லூரி கட்டடத்தில் அந்த முகாம் நடைபெறும்.

