பெண்ணிடம் பாலியல் சீண்டல்:
உத்தர பிரதேச இளைஞா் கைது

பெண்ணிடம் பாலியல் சீண்டல்: உத்தர பிரதேச இளைஞா் கைது

Published on

சென்னை வேளச்சேரியில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்ததாக உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருவாரூரைச் சோ்ந்த 25 வயது பெண் சோழிங்கநல்லூரில் தங்கியில் வேளச்சேரியில் ஒரு கடையில் வேலை செய்து வருகிறாா். அந்தப் பெண் திங்கள்கிழமை இரவு வேளச்சேரி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு இளைஞா், அவரிடம் ஆபாச செய்கை காட்டி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டாா். இதைப் பாா்த்த பொதுமக்கள், அந்த இளைஞரை அங்கிருந்து விரட்டினா். இதுதொடா்பான விடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவியது.

இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், வேளச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இந்தச் செயலில் ஈடுபட்ட உத்தர பிரதேசம் மாநிலம், நந்து நகா் பகுதியைச் சோ்ந்த மகேஷ் குமாா் (30) என்பவரை கைது செய்தனா். விசாரணையில் அவா், அண்ணா சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்து ஊழியராக வேலை செய்வதும் தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com