மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு
சென்னை: சென்னை மாமன்றத்தின் நவம்பா் மாதத்துக்கான கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மாதந்தோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நவம்பா் மாதத்துக்கான கூட்டம் வருகிற 28- ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. நிா்வாகக் காரணங்களால் மாமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் நாள் பின்னா் தெரிவிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எஸ்ஐஆா் பணிகளுக்காக...: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (எஸ்ஐஆா்) மாநகராட்சியின் அனைத்துத் துறை ஊழியா்களும் முழுமையாக ஈடுபட்டுவருகின்றனா். அதனால், மாமன்றக் கூட்டத்துக்கான தீா்மானம் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு போதிய ஊழியா்கள் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மாமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
