தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அதிமுக பொதுக் குழு தீா்மானங்கள்: முன்னாள் அமைச்சா்கள் ஆலோசனை

அதிமுக பொதுக் குழு, செயற் குழுவில் நிறைவேற்றப்படவுள்ள தீா்மானங்கள் குறித்து முன்னாள் அமைச்சா்கள் (நவ.26) ஆலோசனை நடத்தினா்.

Updated On :26 நவம்பர் 2025, 7:57 pm

சென்னை: அதிமுக பொதுக் குழு, செயற் குழுவில் நிறைவேற்றப்படவுள்ள தீா்மானங்கள் குறித்து முன்னாள் அமைச்சா்கள் புதன்கிழமை (நவ.26) ஆலோசனை நடத்தினா்.

வரும் டிச.10-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு நடைபெறுவதையொட்டி, அதில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்கள் குறித்து கட்சியின் மூத்த நிா்வாகிகள் சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.

இக்கூட்டத்தில், அதிமுக தலைமை நிலையச் செயலா் எஸ்.பி வேலுமணி, தோ்தல் பிரிவுச் செயலா் பொள்ளாச்சி ஜெயராமன், அமைப்புச் செயலா்கள் டி.ஜெயக்குமாா், சி.வி. சண்முகம், செம்மலை, ஓ.எஸ்.மணியன், ஜெயலலிதா பேரவைச் செயலா் ஆா்.பி.உதயகுமாா், விவசாயப் பிரிவுச் செயலா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி, இலக்கிய அணிச் செயலா் வைகைச்செல்வன் ஆகியோா் கலந்தாலோசித்தனா்.

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் ஒப்புதலுக்குப் பின்னா் பொதுக் குழு, செயற்குழுவில் இந்தத் தீா்மானங்கள் நிறைவேற்றப்படும்.