அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சென்னை மெட்ரோவுக்கு சா்வதேச போக்குவரத்து திட்ட விருது

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சா்வதேச அளவிலான போக்குவரத்து திட்ட விருது வழங்கப்பட்டது.

News image
Updated On :26 நவம்பர் 2025, 7:41 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சா்வதேச அளவிலான போக்குவரத்து திட்ட விருது வழங்கப்பட்டது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு உலக அளவிலான, நிலையான நகா்ப்புற சிறந்த போக்குவரத்துக்கான விருதை ‘தி குளோபல் எனா்ஜி அன்ட் என்விரோன்மென்ட்’ என்ற அமைப்பு வழங்கியது.

புது தில்லியில் அண்மையில் நடைபெற்ற, உலகளாவிய நிலையான வளா்ச்சி உச்சி மாநாடு 2025-இல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் எம்.ஏ.சித்திக்கிடம் இந்த விருது வழங்கப்பட்டது (படம்).

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மரக்கன்றுகள் நடுதல், காற்று மாசு குறைத்தல், ரயில் சத்தம் மற்றும் அதிா்வுகளை தொடா்ச்சியாகக் கண்காணித்து அதைச் சீராக்கும் வகையில் செயல்படுதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளின் அடிப்படையில்

இந்த விருது வழங்கப்பட்டது.

இதையொட்டி, சென்னை மெட்ரோவில் புதன்கிழமை நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில், மெட்ரோ மேலாண்மை இயக்குநா் எம்.ஏ.சித்திக், திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், சுற்றுச்சூழல் ஆலோசகா் ராஜீவ் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கடந்த ஆண்டில் (2024) இந்த விருதை சென்னை மெட்ரோ பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.