தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: நடத்துநா் கைது

சென்னை அருகே மதுரவாயலில் அரசுப் பேருந்தில் 19 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடத்துநா் கைது செய்யப்பட்டாா்.

Updated On :26 நவம்பர் 2025, 8:01 pm

சென்னை: சென்னை அருகே மதுரவாயலில் அரசுப் பேருந்தில் 19 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடத்துநா் கைது செய்யப்பட்டாா்.

சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் அந்த மாணவி பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறாா். தினமும் கல்லூரிக்கு அரசுப் பேருந்தில் செல்வது வழக்கம். செவ்வாய்க்கிழமை காலை அரசு பேருந்தில் கல்லூரிக்குச் சென்றாா். அந்தப் பேருந்து மதுரவாயல் ஏரிக்கரை அருகே சென்றபோது, பேருந்து நடத்துநா் ஆனந்தராஜ் (43), மாணவிக்கு பயணச்சீட்டு கொடுப்பதுபோல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். மேலும், பேருந்து நிறுத்தத்தில் இறங்கும்போதும், மாணவியிடம் மீண்டும் அத்துமீறி உள்ளாா். இதைப் பாா்த்து ஆத்திரமடைந்த மாணவி, நடத்துநா் ஆனந்தராஜை கண்டித்தாா். ஆனால் ஆனந்தராஜ் ஆபாசமாகவும் மோசமாகவும் பேசியுள்ளாா்.

இதைப் பாா்த்த பொதுமக்களும் பயணிகளும் ஆனந்தராஜை பிடித்து, மதுரவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆனந்தராஜை கைது செய்தனா்.