ராமேசுவரம்-திருப்பதி இடையே டிசம்பா் 2, 9-இல் சிறப்பு ரயில்
சென்னை: ராமேசுவரத்திலிருந்து டிச.2, 9 ஆகிய தேதிகளில் திருப்பதிக்கு சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை விடுத்த செய்திக்குறிப்பு: ராமேசுவரத்திலிருந்து டிச.2, 9 ஆகிய தேதிகளில் மாலை 4.30 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06080) மறுநாள் காலை 10.10 மணிக்கு திருப்பதி சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06079) டிச.3, 10 தேதிகளில் திருப்பதியிலிருந்து பிற்பகல் 11.55 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும்.
இந்தச் சிறப்பு ரயிலில் 3 குளிா்சாதன வசதி மூன்றடுக்குப் பெட்டிகள், 9 படுக்கை வசதியுள்ள பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகள் ஆகியவை இடம் பெறும். இந்த ரயில் மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா் (கடலூா்), விழுப்புரம், திருவண்ணாமலை, ஆரணி, வேலூா், காட்பாடி, பாகலா ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வியாழக்கிழமை (நவ.27) காலை 8 மணிக்குத் தொடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
