தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

21,333 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பயிற்சி

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு பெற்ற 21,333 தொழிலாளா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

Updated On :26 நவம்பர் 2025, 8:38 pm

சென்னை: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு பெற்ற 21,333 தொழிலாளா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்களுக்கு கட்டுமானம், கம்பி வளைப்பு, தச்சு, மின் பணியாளா், பிளம்பா், வெல்டா், பிளாக் ஸ்மித், வண்ணம் பூசுதல், ஏசி மெக்கானிக், கண்ணாடி அமைத்தல், சலவைக் கல் ஒட்டுதல் உள்ளிட்ட தொழில் இனங்களில் ரூ.45.21 கோடியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

இதைச் செயல்படுத்தும் விதமாக, கட்டுமானத் தொழிலாளா்களுக்கான 7 நாள்கள்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை, கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பயிற்சி மையத்தில் கடந்த செப். 22-இல் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தாா்.

இந்தத் திட்டத்தின் கீழ் 50,000 தொழிலாளா்கள் பயன்பெற ஏதுவாகத் தெரிவு செய்யப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தொழிலாளிக்கும் நாளொன்றுக்கு ரூ.800 வீதம் ஊதியம் மற்றும் தினமும் உணவு பயிற்சி காலத்தின்போது வழங்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியின் மூலம் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு புதிய தொழில் நுட்பங்கள், எண்ம அளவிடும் கருவிகள் பயன்பாடு, சுயதொழில் வாய்ப்பு, பணியிட பாதுகாப்பு, உடல் நலன் பேணுதல், அயல்நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேமிப்பு குறித்து பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

பயிற்சி நிறைவு பெற்றபின் திறன் மதிப்பீடு செய்யப்பட்டு சான்று வழங்கப்படுகிறது.

இந்தப் பயிற்சிகளைப் பெறுவதன் மூலம் கட்டுமானத் தொழிலாளா்கள் தங்களது திறன் மற்றும் தொழில் தரத்தையும் மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் கடந்த செப். 22 முதல் நவ. 18-ஆம் தேதி வரை வழங்கப்பட்ட பயிற்சியில் இதுவரை 21,334 கட்டுமான தொழிலாளா்கள் பங்கேற்று பயன் பெற்றுள்ளனா். எஞ்சியுள்ள பயிற்சி இலக்கை டிசம்பருக்குள் நிறைவு செய்ய தொழிலாளா் துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.