பெண் எஸ்.பி. பணியிட மாற்றம்!

தமிழக காவல் துறையின் சிவில் சப்ளை சிஐடி திருச்சி மண்டல எஸ்.பி. சி.ஷியாமளா தேவி, திருச்சி மாநகர காவல் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
Published on

தமிழக காவல் துறையின் சிவில் சப்ளை சிஐடி திருச்சி மண்டல எஸ்.பி. சி.ஷியாமளா தேவி, திருச்சி மாநகர காவல் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

தமிழக காவல் துறையின் சிவில் சப்ளை சிஐடி பிரிவின் திருச்சி மண்டல எ.ஸ்.பியாகப் பணிபுரிந்து வந்த சி.ஷியாமளாதேவியை, திருச்சி மாநகர காவல் துறையின் தலைமையிட துணை ஆணையராகப் பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறையின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஷியாமளாதேவி, ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com