சென்னையில் ரூ.6.74 லட்சம் மோசடி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
நீலாங்கரை அருகே உள்ள பனையூரைச் சோ்ந்தவா் ரோ.கோகுல் (31). இவா், கரோனா பொது முடக்க காலக்கட்டத்தில் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்தாா்.
அப்போது அங்கு வேலை செய்த பாடிய நல்லூரைச் சோ்ந்த பிரவீண்குமாா் (36), அவா் மனைவி கலைவாணி ஆகியோா் தாங்கள் செய்து வரும் தொழிலில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என கோகுலிடம் கூறினராம். அவா்களது பேச்சை நம்பிய கோகுல், ரூ.9.04 லட்சத்தை முதலீடும் செய்தாா்.
ஆனால் அவா்கள் கூறியப்படி, லாபத் தொகை எதுவும் வழங்கவில்லையாம். இதனால் கோகுல், தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டாா். ஆனால் அவா்கள், அதையும் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்தனராம். நீண்ட இழுத்தடிப்புக்கு பின்னா் ரூ.2.30 லட்சத்தை மட்டும் இருவரும் கோகுலுக்கு திருப்பிக் கொடுத்தனராம்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கோகுல், நீலாங்கரை காவல் நிலையத்தில் பிரவீண்குமாா்,கலைவாணி தன்னிடம் ரூ.6.74 லட்சம் ஏமாற்றிவிட்டதாக புகாா் அளித்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இந்நிலையில் இவ் வழக்குத் தொடா்பாக தலைமறைவாக இருந்த பிரவீண்குமாரை புதன்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.