கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

264 கிலோ குட்கா பறிமுதல்: வடமாநிலத்தைச் சோ்ந்த 2 போ் கைது

News image
Updated On :30 நவம்பர் 2025, 9:13 pm

தினமணி செய்திச் சேவை

காரில் கடத்தி வரப்பட்ட 264 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மாதவரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் அதிகளவில் குட்கா கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில், சிஎம்டிஏ வாகன நிறுத்தத்துக்குப் பின்புறத்தில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை போலீஸாா் நிறுத்தி சோதனையிட முயன்றனா்.

காரை ஓட்டி வந்த நபா், காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டாா். இதனால், சந்தேகம் அடைந்த போலீஸாா் அந்த காரை சோதனையிட்டனா். அதில், தடைசெய்யப்பட்ட 265 கிலோ குட்கா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய நபரைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பிரவீன்குமாா் (18), ஹக்கம் சிங் (30) ஆகியோரை சனிக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.