டிட்வா புயல்: மெரீனாவுக்கு மக்கள் செல்லத் தடை!
டிட்வா புயல் காரணமாக மெரீனா கடற்கரைக்கு மக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
‘டிட்வா’ புயல் வட தமிழகத்தை நெருங்கிவரும் நிலையில், இன்று (நவ. 30) திருவள்ளூா், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதிபலத்த மழைக்கான ‘சிவப்பு’ எச்சரிக்கையும், சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சென்னையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
‘டிட்வா’ புயலால், சென்னை மெரீனா கடற்கரையில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மக்கள் மெரீனா கடற்கரைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெரீனா கடற்கரைக்குள் மக்கள் செல்லாதபடி தடுப்புகள் அமைத்து கண்காணிக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
People have been banned from visiting Marina Beach due to Cyclone Titva.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

