கொளத்தூரில் ரூ.110.92 கோடியில் அதிநவீன துணை மின்நிலையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கணேசபுரத்தில் ரூ.110.92 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன துணை மின்நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
கொளத்தூரில் ரூ.110.92 கோடியில் அதிநவீன துணை மின்நிலையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கணேசபுரத்தில் ரூ.110.92 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன துணை மின்நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தில் கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கணேசபுரத்தில் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் சார்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய வளிம காப்பு துணை மின்நிலையம் அமைக்கப்பட்டது.

இந்த துணை மின் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தார். இதன் வாயிலாக கொளத்தூர், பெரியார் நகர், அன்னை நகர், நேர்மை நகர், கணேஷ் நகர், மாதவரம் ரேடியன்ஸ் என சுமார் 1 லட்சம் மின் நுகர்வோர்கள் பயனடைவர்.

இதையொட்டி, முதல்வர் உருவம் மற்றும் தமிழ்நாடு மின்சார தொடரமைப்பு சின்னத்தை குறிக்கும் வகையில் டிரோன்கள் வடிவமைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றன.

இதையடுத்து, கொளத்தூர் கணேஷ் நகரில் உள்ள ஒருங்கிணைந்த கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி வளாகத்தில் ரூ.12 லட்சத்தில் அமைக்கப்பட்ட தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சா.சி.சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, சிவ.வீ.மெய்யநாதன், சென்னை மேயர் ஆர்.பிரியா, மக்களவை உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, வெற்றியழகன் மற்றும் சேமிப்புக் கிடங்கு நிறுவனத் தலைவர் ஜோசப் சாமுவேல், சேமிப்பு நிறுவனத் தலைவர் ப.ரங்கநாதன், தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com