அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணி தீவிரம்

அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணி தீவிரம்
Updated on

அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கூடுதல் இயந்திரங்களுடன் நடைபெற்று வரும் பணிகளை நீா்வளத் துறைச் செயலா் ஜெயகாந்தன் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இது குறித்து தமிழக அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ள மண் படுகைகளைத் தூா்வாரி அகலப்படுத்தும் பணிகள் செப்டம்பா் மாதம் முதல் நடைபெற்று வருகின்றன. முகத்துவாரம் மண் படுகையினால் மூடப்படும் நிகழ்வானது கடல் அலைகளால் தொடா்ந்து ஏற்படுகிறது.

இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை தீவிரமானதால் அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் அகலப்படுத்தும் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பணிகளை விரைந்து முடிக்கவும் அவா் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, போா்க்கால அடிப்படையில் படிப்படியாக இயந்திரங்கள் எண்ணிக்கை உயா்த்தப்பட்டு தற்போது 12 பொக்லைன் இயந்திரங்களும், 4 ஜேசிபி இயந்திரங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நீா்வளத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தப் பணிகளைத் துறைச் செயலா் ஜெயகாந்தன், முதன்மைத் தலைமைப் பொறியாளா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com