கல்பாக்கம் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியில் சட்டவிரோதமாக இலங்கையை சேர்ந்த சிலர் தங்கியிருப்பதாக சென்னை காவல்துறை தனிப்படை பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸôர், கல்பாக்கம் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த இசை வேந்தன்(26), யோகராசா(26), சுஜீவன்(30) ஆகியோரை பிடித்து போலீஸôர் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் மூன்று பேரிடமும் இந்தியாவில் வந்து தங்குவதற்கான எந்த ஆவணமும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் மூன்று பேர் மீதும் இலங்கையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இவர்கள் எவ்வாறு தமிழகம் வந்தனர்?, எதற்காக வந்தனர் என்பது குறித்து சிறப்பு படைப்பிரிவு போலீஸார் அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.