சென்னையில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய 6 நாள்களில் 14,089 புகார்கள் வந்துள்ளதாகவும், அவற்றில் 6,206 புகார்கள் மீதான கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைந்துள்ளது. மையத்தில் 24 மணி நேரமும் 1913 உதவி எண், வாட்ஸ் ஆப் செயலி உள்ளிட்டவை மூலம் புகார் அளிக்கும் வசதிகள் உள்ளன.
கடந்த 17- ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து அக். 27 வரை 14,089 புகார்கள் வந்துள்ளன. அதில் பெரும்பாலானவை மழைநீர் தேக்கம், மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியிருப்பது, மின் பிரச்னைகள், மின் கம்பிகளில் மரக்கிளைகள் சாய்ந்திருப்பது தொடர்பானவையாகும்.
கட்டுப்பாட்டு மையத்துக்கு உதவி எண் 1913 மூலம் 13,147 பேரும், சமூக வலைதளம் மூலம் 859 பேரும், கட்டுப்பாட்டு அறைக்கு நேரடியாக வாட்ஸ் ஆப் உள்ளிட்டவை மூலம் 83 பேரும் புகாரை பதிவு செய்துள்ளனர். இதில் 6,206 புகார்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
துணை முதல்வர் ஆய்வு: சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை (அக். 28) அதிகாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த மையத்தில் பெறப்பட்ட புகார்கள், அதன் மீதான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.