மோந்தா புயல் காரணமாக தெற்கு ரயில்வே மண்டலத்தில் 14 ரயில்கள் செவ்வாய்க்கிழமை தாமதமாகப் புறப்பட்டுச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மோந்தா புயலை தொடர்ந்து பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து ஹவுரா செல்லும் கோரமண்டல் விரைவு ரயில் (எண் 12842) திங்கள்கிழமை காலை 7 மணிக்குப் பதிலாக செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணிக்கு சுமார் 16.30 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் அதிவிரைவு ரயில் (எண் 12840) இரவு 10.40 மணி என சுமார் 3.40 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.
சென்னை சென்ட்ரலில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குப் புறப்பட்டு விசாகப்பட்டினம் செல்லவேண்டிய அதிவிரைவு ரயில் (எண் 22870) இரவு 11.50 மணி என சுமார் 13.50 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டு சென்றது.
இதேபோல, திருச்சி-ஹவுரா, தன்பாத்-ஆழப்புழை, விழுப்புரம்-மேற்கு வங்கம் கரக்பூர் உள்ளிட்ட 14 விரைவு ரயில்கள் தாமதமாக செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றன என அதிகாரிகள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.