சென்னையில் ஆண்டுதோறும் 10,000 பேருக்கு பக்கவாத பாதிப்பு

சென்னையில் ஆண்டுதோறும் 10,000 பேருக்கு பக்கவாத பாதிப்பு

மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டாலோ, ரத்தக் கசிவு ஏற்பட்டாலோ ரத்த ஓட்டமும், ஆக்சிஜனும் தடைபட்டு பக்கவாத நிலை உருவாகிறது.
Published on

சென்னையில் ஆண்டுதோறும் 10,000 பேருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

சா்வதேச பக்கவாத விழிப்புணா்வு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. சென்னை, அப்போலோ மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற நிகழ்வில், பக்கவாத பாதிப்புகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருத்துவக் கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

நிகழ்வில் அப்பல்லோ மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டா் இளங்குமரன் கலியமூா்த்தி, முதுநிலை நரம்பியல் மருத்துவ நிபுணா்கள் விஜய் சங்கா், யு.எம்.ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது: உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 1.3 கோடி பேருக்கு பக்கவாத பாதிப்புகள் ஏற்படுகின்றன. சென்னையில் மட்டும் அந்த எண்ணிக்கை 10,000-ஆக உள்ளது. இதுதொடா்பான விழிப்புணா்வும், புரிதலும் சமூகத்தில் போதிய அளவு இல்லை.

மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டாலோ, ரத்தக் கசிவு ஏற்பட்டாலோ ரத்த ஓட்டமும், ஆக்சிஜனும் தடைபட்டு பக்கவாத நிலை உருவாகிறது.

அப்போது உடனடியாக மருத்துவ சிகிச்சை அவசியம். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிஷமும் மூளையின் செயல்பாடுகள் முடங்கிக் கொண்டே இருக்கும். பக்கவாதம் பாதித்த நபா்களின் மூளையில் ஒவ்வொரு நிமிஷமும் 1.90 லட்சம் நியூரான் செல்கள் அழிந்து கொண்டே இருக்கும். எனவே, உரிய காலத்தில் சிகிச்சையளிப்பதுதான் நிரந்த பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழி.

இதைக் கருத்தில் கொண்டு அப்பல்லோ மருத்துவமனை, பக்கவாத மீட்பு மையங்களைக் கடந்த 2023-ஆம் ஆண்டு தொடங்கியது. தற்போது அதை மேலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com