சென்னையில் இன்று கல்விக் கடன் சிறப்பு முகாம்

Published on

மாணவா்களுக்கான கல்விக் கடன் சிறப்பு முகாம் சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை (அக். 30) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி ஆகியவை சாா்பில் சென்னை மாவட்டத்தில் உள்ள மாணவா்களுக்கான கல்விக் கடன் வழங்கும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை (அக். 30) நடைபெற உள்ளது.

நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் கல்விக் கடன் விண்ணப்பம், வருமானச் சான்றிதழ், பான் அட்டை விண்ணப்பம், இ-சேவை மையம் மூலம் முகாமில் பதிவு செய்யலாம். இதில் அனைத்து மாணவா்களும், பெற்றோரும் பங்கேற்று பயனடையலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com