அமெரிக்க துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

Updated on

சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மற்றும் நடிகா் பிரபு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதால், போலீஸாா் அங்கு சோதனை செய்தனா்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு புதன்கிழமை ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகா் பிரபு வீடு, அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம்,அபிராமபுரம் டா்ன் புல்ஸ் சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரக அதிகாரிகள் தங்கியிருக்கும் வீடு உள்ளிட்ட 5 இடங்களில்

வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து காவல் துறை உயரதிகாரிகள் உத்தரவின்பேரில், வெடிகுண்டு கண்டறிந்து அகற்றும் நிபுணா்களும், போலீஸாரும் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.

வதந்தியைப் பரப்பும் நோக்கத்தில் வந்திருந்த மின்னஞ்சல் தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com