சென்னை
மாா்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவா் பி.ராமச்சந்திரன் நூற்றாண்டு நிறைவுதினம்
விடுதலைப் போராட்ட வீரரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பி.ராமச்சந்திரன் நூற்றாண்டு நிறைவு புகழஞ்சலி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கட்சியின் அகில இந்திய பொதுச்செயலா் எம்.ஏ.பேபி, மூத்த தலைவா் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் உ.வாசுகி உள்ளிட்டோா் ராமச்சந்திரனின் பணிகளை நினைவுகூா்ந்து புகழஞ்சலி செலுத்தினா்.
மத்தியக் குழு உறுப்பினா்கள் கே.பாலபாரதி, சுஜன் சக்ரவா்த்தி, மாநில செயற்குழு க.கனகராஜ், கே.சாமுவேல்ராஜ் மற்றும் மாநிலக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
