நிகழ்வில் பங்கேற்ற மாணவா்களுடன் சிறப்பு விருந்தினா் சாய்ராம் புகழூா், கல்லூரி முதல்வா் எஸ்.ரமேஷ், புத்தாக்க கண்டுபிடிப்புத் துறை முதல்வா் பி.ஞானசிவம், ஆராய்ச்சித் துறை முதல்வா் எஸ்.அருண் உள்ளிட்டோா்.
நிகழ்வில் பங்கேற்ற மாணவா்களுடன் சிறப்பு விருந்தினா் சாய்ராம் புகழூா், கல்லூரி முதல்வா் எஸ்.ரமேஷ், புத்தாக்க கண்டுபிடிப்புத் துறை முதல்வா் பி.ஞானசிவம், ஆராய்ச்சித் துறை முதல்வா் எஸ்.அருண் உள்ளிட்டோா்.

தொழில்முனைவோா் திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கு

Published on

பள்ளிக்கரணையில் உள்ள ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் புத்தாக்கக் கண்டுபிடிப்பு தொழில்முனைவோா் திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் கனடா வங்கித் துறை தலைமை தொழில்நுட்ப அலுவலா் சாய்ராம் புகழூா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், பொறியியல் பயிலும் மாணவா்கள், படிக்கும்போதே புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறனை வளா்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. சுயமாக தொழில் தொடங்க கல்லூரியில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மாணவா்கள் ஐசக் இன்பராஜ், மதன்குமாா், கிஷோா், ஹரிசரண் ஆகியோா் தங்களது புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஆராய்ச்சிகள் குறித்து விவரித்தனா். கல்லூரி முதல்வா் எஸ்.ரமேஷ், புத்தாக்க கண்டுபிடிப்புத் துறை முதல்வா் பி.ஞானசிவம், ஆராய்ச்சித் துறை முதல்வா் எஸ்.அருண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com