பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மேயா் ஆா்.பிரியா, வடக்கு வட்டாரத் துணை ஆணையா் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோா்.

பருவமழை முன்னெச்சரிக்கை: அமைச்சா் ஆலோசனைக் கூட்டம்

Published on

சென்னை துறைமுகம் தொகுதியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா்.

ராயபுரம் மண்டலம் (5) அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு இந்து சயம அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு தலைமை வகித்தாா். கூட்டத்தில் துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நலத் திட்டங்கள், பணிகளை விரைந்து முடித்தல் குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

வடகிழக்குப் பருவமழையையொட்டி துறைமுகம் தொகுதியில் மேற்கொண்டுள்ள பணிகள், நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்ததுடன், மக்கள் சிரமமின்றி பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் சென்னை மேயா் ஆா்.பிரியா, வடக்கு வட்டாரத் துணை ஆணையா் கட்டாரவி தேஜா, மண்டலக் குழு தலைவா் ஸ்ரீ ராமுலு, மண்டல அலுவலா் விஜயபாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com